மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / தமிழக அரசு பணிகள் / VOC துறைமுகத்தில் பணிகள்

VOC துறைமுகத்தில் பணிகள்

தூத்துக்குடியில் உள்ள “வ. உ. சிதம்பரனார்  துறைமுக கழகத்தில்” கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணி: Assistant Traffic Manager Gr.I

காலியிடங்கள்: 3

2.பணி: Assistant Secretary Gr.I

காலியிடம்: 1

மேற்கண்ட 2  பணிகளுக்குமான கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3.பணி: Accounts Officer Gr.I

காலியிடம்: 1

கல்வித்தகுதி: ICAI/ICWAI-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட 3 பணிகளுக்குமான சம்பளவிகிதம் மற்றும் வயதுவரம்பு விபரம்:

சம்பளவிகிதம்: 20,600- 46,500

வயது வரம்பு: 31.1.2019 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 3

சம்பளவிகிதம்: 25,200-59,600

வயது வரம்பு: 31.1.2019 தேதிப்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை

OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் PWD/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு விற்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் போன்ற விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.500. (SC/ST/PWD-ரூ.100). இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.vocport.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.3.2019.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு

https://drive.google.com/file/d/1uHVZ0dzdCw5OCNdqwXs9ICr6KuqFYLiP/view

வேலைவாய்ப்பு

திருச்சி NIT-ல் வேலை

திருச்சி NIT-ல் நிரப்பப்பட உள்ள  கீழ்க்கண்ட பணிக்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Junior Research Fellow (JRF …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *