மன்னிக்கவும்! வேலைவாய்ப்பு not allow to copy content of this page

Home / வங்கி பணிகள் / SBI வங்கியில் 8,653  பணியிடங்கள்

SBI வங்கியில் 8,653  பணியிடங்கள்

SBI என அழைக்கப்படும் “ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா”-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதி உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8,653

பணி: Junior Associate (Customer Support & Sales) 

தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.04.1999க்கு முன்பும் 02.04.1991க்கு பின்னும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,075 – 31,450

தேர்வுக் கட்டணம்: பொது/OBC பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in ,  https://bank.sbi/careers , https://www.sbi.co.in/careers  போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf  

வேலைவாய்ப்பு

IDBI வங்கியில் 300 காலியிடங்கள்

IDBI  எனப்படும் Industrial Development Bank of India வங்கியில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *